திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்தி, கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அழகர்சாமி LRF மாவட்ட கவுன்சில் செயலாளர் தலைமையில், திமுக கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரன், திமுக மேற்கு பகுதி செயலாளர் பஜீலுல் ஹக் முன்னிலையில், முருகன் INTUC, கண்ணன் INTUC, பாலன் AITUC, நாச்சிமுத்து AITUC, மோகன் MLF, ரவி AICCTU, பிரபாகரன்CITU, சையது இப்ராகீம் HMS, உமாராணி INTUC மற்றும் 50 மேற்பட்ட தொழிற்சங்க பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.