Headlines

கடையநல்லூர் அருகே பயங்கரம்வீட்டு குளியலறையில் பெண்ணை குத்திக்கொன்று நகை கொள்ளை நாடகமாடிய என்ஜினீயர் அதிரடி கைது.

கடையநல்லூர் அருகே பயங்கரம்வீட்டு குளியலறையில் பெண்ணை குத்திக்கொன்று நகை கொள்ளை நாடகமாடிய என்ஜினீயர் அதிரடி கைது.

கடையநல்லூர் : ஜனவரி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேவீட்டு குளியலறையில் புகுந்து பெண்ணை சரமாரி குத் திக்கொலை செய்து நகையை கொள்ளைய டித்து விட்டு நாடகமா டிய என்ஜினீயரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொழிலாளி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அருணாசலபுரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யங்கண்ணு துபாயில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி முருக செல்வி (வயது 39) பீடி சுற்றும் தொழிலாளி இந்த தம்பதிக்கு 10 வயதில் மகள் உள்ளார்.

இதனால் முருகசெல்வி தனது மகளுடன் அருணாசல புரத்தில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார். வடநத்தம்பட் டியை சேர்ந்தவர் சரத் (வயது 24) என்ஜினீயரிங்படித்துள்ள இவர் தற்போது பால் வியா பாரம் செய்து வருகிறார்.

கொடூர கொலை

இவர் தினமும் முருகசெல் வியின் வீட்டுக்கு பால் வினி யோகம் செய்வது வழக்கம். மார்கழி மாதம் என்பதால் நேற்று அதிகாலை முகுக செல்வி அருகிலுள்ள கிருஷ் ணர் கோவிலுக்கு புறப்பட்ட டுக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட் டுக்கு பால் வினியோகம்
செய்வதற்காக சரத் சென்றார் சிறிது நேரத்தில் அவரது வீட்டுக்குள் இருந்து பரபரப் பாகவெளியே ஓடிவந்தசரத் அக்கம்பக்கத்தினரிடம், முருக செல்வியின் வீட்டு வளாகத்தில் உள்ள தனி குளி யலறையில் இருந்து ரத்தம் வெளியேறுவதாக கூறினார்.

இதைக்கண்ட அக்கம்பக் சுத்தினர் சேர்ந்தமரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள குளியல் அறை பகுதியில் இரும்பு கம்பியால் குத்தப்பட்டு முருகசெல்வி கொடூரமாக கொலை செய் யப்பட்டு கிடந்ததை போலிசார் பார்த்தனர்.

சோதனை

அதற்குள் வீட்டுக்குள்ளே தூங்கிக்கொண்டிருந்த முருகச்செல்வியின் மகள் வெளியே ஓடிவந்தாள் அவள் தனது தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு கதறி அழுதான்.

உடனே முருக செல்வியின் ‌உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசி மாவட்ட தடய வியல் நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர் நெல்லையிலிருந்து மோப்ப நாய் சீசர் வரவழைக்கப் பட்டு சோதனை நடத்தப்பட்டது.

கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், புளியங் குடி துணை சூப்பிரண்டு மீனாட்சிநாதன், பயிற்சி துணை சூப்பிரண்டு லோக நாதன், சேர்ந்தமரம் இன்ஸ் பெக்டர் அருள்சாம்ராஜ். ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் சேர்ந்தமரம் கிராமத்தில் முகாமிட்டுவிசாரணை நடத் தினர்.

திடுக்கிடும் தகவல்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் SP உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதலில் கொலையை பார்த்த தாக கூறிய சரத் மீது போலீ சாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.”

அதில் திடுக்கிடும் தகவல் கள் வெளியானது.

காலையில் , முருக செல்வி கோவிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த பொழுது சரத் அங்கு பால் ஊற்ற வந்தார் அப்பொழுது தனியாக இருந்த முருக செல்வின் கழுத்தில் கிடந்த நான்கு பவுன் தாலி செயினை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது அவரிடம் இருந்து தப்பிக்க நினைத்த முருக செல்வி குளியலறைக்குள் ஓட முயன்றார் ஆனால் சரத் விடாமல் பின்னால் சென்று முருக செல்வி கீழே தள்ளி இரும்பு கம்பியால் அவரது முகம் கழுத்தில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்

நாடகமாடிய என்ஜினியர் கைது

இதையடுத்து அவரது கழுத் திலகிடந்த 4 பவுன் செயினை பறித்துக்கொண்டு சரத் வெளியே வந்தார். தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூ டாது என்ற நோக்கத்திலேயே, அக்கம்பக்கத்தினரிடம் ஓடிச் சென்று முருக செல்வி வீட்டு குளியலறையில் இருந்து ரத் தம் வருவதாக கூறி நாடகமா டியது தெரியவந்தது.

இதையடுத்து சரத்தை போலீசார் கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர். மேலும் அவரி டம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம், திருடப்பட்ட 4 பவுன் நகையை பறிமுதல் செய்த னர்.

கொலை நடந்த 6 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *