திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் அன்னை சோனியா காந்தியின் திருவுருவப்படம் வைத்து பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வின் தலைமையாக நகர தலைவர் முத்து விஜயன் மண்டல தலைவர் வீரமணி வரவேற்புரையாக மாநில பொறுப்பாளர் சாய்ரா பானு பேராசிரியர் கனகராஜ் மாவட்டத் துணை தலைவர் முருகானந்தம் மற்றும் சுந்தர், ராமகிருஷ்ணன், தேவேந்திரன், நேரு, முகமது அலி, பாப்புச்சாமி, பீட்டர், கணபதி, பிரேம்குமார், குப்புசாமி, சரவணன், மணிகண்டன், பாலு, தண்டபாணி, சாகுல் ஹமீது, சுப்பிரமணி, செல்வம், முத்துக்கிருஷ்ணன், முத்துபாண்டி, லோகநாதன், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சோனியா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் இந்தி தேசிய காங்கிரஸின் புகழ் பாடும் விதமாக கட்சி நிர்வாகிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பிறந்தநாள் விழா நிகழ்ச்சி வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்..
செய்திகளுக்கு : நா.ராஜாமணி – 89733 50663
