நேற்று(05.10.25)கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் திரு,துரை. செந்தமிழ்செல்வன் பதவிஏற்பு விழா,காந்திபுரம் தந்தைபெரியார்,பேரறிஞர் அண்ணா, டாக்டர்கலைஞர், படங்களுக்கு, மாலை அணிவித்து, மலர் தூவி, அஞ்சலி செலுத்தி, மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மேற்கு மண்டல பொறுப்பு முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள், முன்னாள் கோவை மாவட்ட செயலாளர்,மற்றும் முன்னாள் அமைச்சர், அமைச்சர், திரு,நா. பொங்கலூர் பழனிச்சாமி, கோவை மாவட்ட எம்பி திரு.கணபதி ராஜ்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் திரு.அ. ரவி, மேற்கு மாவட்ட செயலாளர் திரு.தளபதி முருகேசன், மற்றும் கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும், மூன்று மாவட்ட செயலாளர் இணைந்து கோவையில் 10 தொகுதிகளையும் வெற்றி பெறுவோம் என்றும், அதற்காக அனைவரும் கடின உழைப்பை செலுத்த வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் மாநகர் மாவட்ட கழக அலுவலகம் சென்று முறைப்படி திரு, துரை செந்தமிழ் செல்வன் அவர்கள், மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏறறுக்கொண்டார்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார், படங்கள் : தினேஷ்.
