ஆக் 29, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான போதுமான இடம் இல்லாத நிலையில், போக்குவரத்து காவல் துறை அதிகாரியின் செயலால் ஓட்டுநர் ஒருவர் அவதியுற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோர கோட்டிற்கு உள் பகுதியில் வாகனத்தை நிறுத்தி வைத்து, அலைபேசி அழைப்பில் ஈடுபட்டிருந்த ஓட்டுநரிடம், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் அதிகாரத் தோரணையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் கேட்ட ஓட்டுநரின் வாகனத்தில் இருந்தபடியே, அவர் மீது அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் குறிப்பிடத்தக்கது, அதே பகுதியில் பல வாகனங்கள் “No Parking” பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், கேள்வி கேட்ட ஓட்டுநருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள், “நாகர்கோவிலில் சாலையோரங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாகன நிறுத்தும் வசதி கூட இல்லாததே முக்கிய பிரச்சினை.
விதிமுறைகள் எல்லோருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் கேள்வி கேட்டதற்காக மட்டும் அபராதம் விதிப்பது அநீதி” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கேமராமேன் : ஜெனீருடன்
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
