ஆக் 29, கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் புது கிராமம் அருகே உள்ள மாணிக்கம் புத்தேரி குளத்தில் மூன்று மடைகளில் உடைப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்வை முன்னிட்டு, முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.
மடை உடைப்பால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து உடனடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தளவாய் சுந்தரம் வலியுறுத்தினார்.
மேலும், அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு நிம்மதி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
