தென்காசி மாவட்டம் தென்காசியில் இயங்கி வருகிற ஐடிஐ தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்க வேண்டி கோரிக்கை மனு வழங்கினார்.தென்காசியில் ரயில்வே மேம்பாலம் மேல் புறம் ஐடிஐ அமைந்துள்ளது அந்த ஐடிஐ தென் புறம் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற ஆடு மாடுகள் நாய்கள் ஐடிஐ வளாகத்திற்குள் வந்து விடுகிறது இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு பெற்ற தன்மை ஏற்படுகிறது அதேபோல் சமூக விரோதிகளும் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்திற்குள்க் வர வாய்ப்புள்ளது.
மேலும் 4.0 தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன தொழிற்சாலை சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் சுமார் ரூபாய்35 கோடி நவீன தொழில் நுட்ப பொருள்களுடன் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது
அதுவும் இந்த வளாகத்திற்குள் தான் அமைந்துள்ளது
ஐடிஐ யைசுற்றி நான்கு புறமும் சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது
ஆகையினால் அமைச்சர் அவர்கள் ஐடிஐயை சுற்றி சுற்றுச் சுவர் அமைத்திட நிதி ஒதுக்குமாறு அமைச்சரை கேட்டுக் கொண்டார்
இது சம்பந்தமாக ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு மனு கொடுத்து சர்வே செய்யப்பட்டு அதன் பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதி பின்னர் மாற்று திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு விட்டது
ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த முறை கல்லூரி மாணவர்கள் நலம் கருதியும் இருக்கிற பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பாதுகாக்கிற வகையில் சுற்று சுவர் அமைக்க நிதி ஒதுக்கிட கேட்டுக் கொண்டே ன்
மாண்புமிகு அமைச்சர் அவர்களும் நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்குவதாக வாக்குறுதி வழங்கினார்
நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம் ஒன்றிய கழகச் செயலாளர் சீனித்துரை ஜெயக்குமார் சாமிதுரை துரை கணபதி ஸ்டீபன் சத்யராஜ் ஹரி கிருஷ்ணன் வனராஜ் செல்வகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்