உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் கஞ்சா வியாபாரிகள் நான்கு பேரை மடக்கி பிடித்த சிறப்பு படை போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி உத்தரவின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு படை வீரர்கள் மூலம் நடவடிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் சிறப்பு படைப்பு போலீசார் எம்.குன்னத்தூர்.கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது அங்கு இளைஞர்கள் சிலர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களை சிறப்பு படை போலீசார் கண்காணித்து…