வேளாண்மை
ஆயக்குடியில் வரதமாநதி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கொடைக்கானல் சாலையில் உள்ளது வரதமா நதி அணை. இந்த ஆண்டிற்கான பருவ மழை குறுகிய நிலையில் பெய்த காரணத்தினால் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை அப்பகுதி விவசாயிகள் கொண்டு சென்று தற்போது நெல் நடவு செய்துள்ளனர். இதனையடுத்து போதிய மழை இல்லாததால் அணை நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயம் இல்லாத பட்டிக்குளம் பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு…
கடலூர் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை..!
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த கறிக்குப்பத்தை சேர்ந்தவர் விவசாயி முத்தமிழ்ச்செல்வன் வயது (34). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த முத்தமிழ்ச்செல்வன் நேற்று தனது வீட்டின் மின்விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிருபர்R. விக்னேஷ்
விவசாயிகள் மகாசபை காத்திருப்பு போராட்டம்..!
உடுமலைநவம்பர் 06. உடுமலை அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. தாலுகா செயலாளர் கல்லாபுரம் அருணாச்சலம் தலைமை வகித்தார். செல்வராஜ், சுந்தரராஜ். ராஜசேகர், ஜெயக்குமார், கருப்புசாமி, சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துக்குளம் தாலுகா கல்லாபுரம் முதல் கடத்தூர் வரையில் உள்ள விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயிகளின் நிலங்களை மிரட்டி பறிக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை…
விவசாயிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..
தற்போது கரும்பு விவசாயிகளின் வயலில் பஞ்சு அஸ்வினி(கள்ளிப்பூச்சி) தாக்குதல் காணப்படுகிறது. அதனை கட்டுப்படுத்த அசிப்பேட்(Acephate) 3மி.லி மருந்தினை 1லி தண்ணீர் எனும் வீதத்தில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் (அல்லது) 3மி.லி வேப்ப எண்ணெய் 1 லி தண்ணீர் எனும் வீதத்தில் கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.
ஸ்ரீ ஜி.வி.ஜிவிசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா.. மற்றும் கருத்தரங்கம்..
உடுமலைஅக்டோபர் 11. உடுமலை, ஸ்ரீ ஜி. வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் இன்று மாபெரும் விதைத் திருவிழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தாய்மண் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்தியது. கடவுள் வாழ்த்துப் பாடல் மற்றும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. இதனை அடுத்து பொள்ளாச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கு. சண்முகசுந்தரம் வரவேற்புரை மற்றும் சிறப்புரை வழங்கினார். இதில் இயற்கை விவசாயம், நபார்டு வங்கியின்…
உடுமலை மற்றும் மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளிக்கு உரிய விலை இல்லாத காரணத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
செப் 07. உடுமலை திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மானாவாரி மற்றும் இறவை பாசன பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது இப்பகுதிகளில் நாட்டுத் தக்காளி கொடி தக்காளி என பல்வேறு ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது . தக்காளி சாகுபடி செய்ய நிலத்தைப் பதப்படுத்துதல் அளவு அடியுரம் நடவு களை பறித்தல் காய்கறிப் பயிர் பாதுகாப்பு என ஏக்கருக்கு 40 முதல் 50 ஆயிரம் வரை செலவு பிடித்து வருகிறது….
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயுதபூஜை முன்னிட்டு தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.
செப் 30 : உடுமலை உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டு தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், பகுதிகளில் பிஏபி பாசன பகுதி மற்றும் அமராவதி பாசன பகுதிகளில் ஒரு லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர கிணற்றுப் பாசனம் ஆழ் குழாய் , சொட்டு நீர்ப்பாசனம் மூலமும் தென்னை சாகுபடி பரப்பு விரிவடைந்துள்ளது .25 ஆண்டுகளுக்கு முன்பு வரை 2000 ஆண்டில் உடுமலை…
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி குறைவு – விவசாயிகள் வேதனை.
செப் 27 கன்னியாகுமரி ஒருகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 10,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. ஆனால், படிப்படியாக விவசாய நிலங்கள் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற உபயோகங்களுக்கு மாற்றப்பட்டதால், தற்போது அது 6,500 ஹெக்டேராக குறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி ஆண்டுதோறும் இரண்டு பருவங்களில் நடைபெறுகிறது. அவை கன்னிப்பூ மற்றும் கும்பபூ. தற்போது கன்னிப்பூ பருவ நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக…
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் உயிர்ம வேளாண் பபண்ணை திடல் அமைப்பு.
முதல்-அமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரி பண்ணை திடல் அமைக்கப்படுகிறது.அதன்படி உடுமலை வட்டாரம் வாளவாடி கிராமத்தில் நடராஜன் என்ற விவசாயியை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறுகையில், இயற்கை இடுபொருட்கள், பூச்சி விரட்டிகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள்,பெயர் பலகை அமைத்தல்,உயிர் உரங்கள் உயிர்ம வேளாண்மை சான்று பெறுவதற்கான ஊக்கத்தொகை போன்றவற்றுக்கு ரூ.10 ஆயிரம்…
உடுமலையில் வேளாண்மை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தா.வைரமுத்து வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் செ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் ரா.கண்ணன் முன்னிலை வகித்தார்.அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மாநில தலைவரின் எழுத்துரை நிர்வாகிகளுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. அதனை தொடர்ந்து தீர்மான கருத்துக்களை நிர்வாகிகள் முன்வைத்து பேசினார்கள். பின்னர் ஊதியம் தொடர்பாக சத்ய நாராயணன் கமிட்டிக்கு அறிக்கை தயார்…
