விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உதவி ஆய்வாளர்கள் திரு.சுதன் மற்றும் திரு.நவநீதகிருஷ்ணன் ஆகிய இருவரும் ரோந்து பணியில் இருந்த போது விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரு பெண்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் இவர்கள் புதுச்சேரியில் இருந்து மதுபானங்களை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரியவர இதன் எதிரிகள் செஞ்சி மழவந்தாங்கல் மலையரசன் குப்பம் புது தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி தமிழரசி (60) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் என்பவரின் மனைவி இந்திராகாந்தி (50) ஆகிய இருவரையும் கைது செய்து 180 ml அளவு கொண்ட 160 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

