தீர்ப்பு வந்தபோது இந்த இடத்தில் நான் இருந்திருந்தால், ‘நான் சட்டத்தின் வேலைக்காரன். அரசாங்கத்தின் வாய்மொழி அறிவுறுத்தல்கள் சட்டவிரோதமாக இருக்கும் வரை அரசாங்கத்தின் வேலைக்காரன் அல்ல’ என, நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன், முதல்வர், உள்துறை அமைச்சருக்கு மெயில் அனுப்பியிருப்பேன்.
உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள் போலீசே கிடையாது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எனக்கு எதிராக ஒன்னே முக்கால் மணி நேரம் வழக்கறிஞராக வாதாடியவர். எனினும், அவரது நேர்மையான பணிக்கு, அவருக்கு ஆதரவாக 2,000 கையெழுத்து என்றாலும் போடுவேன்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின்நபின், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் என, அனைவரும் அஞ்சலி செலுத்த இங்கு வர வேண்டும்.
பூர்ணசந்திரனின் இரு குழந்தைகளின் கல்வி செலவுக்காக நிதி திரட்டுவேன். குழந்தைகளின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி, திரட்டும் நிதியை வைப்பு தொகையாக செலுத்துவேன். அதில் ஒரு பைசா கூட யாரும் தொட முடியாதபடி செய்வேன்
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
