குமரி துவாரகாபதி கடற்கரையில் உலக மண் தினம் விழா மாணவர்கள் இணைந்து தூய்மை பணி – மரக்கன்று நடுதல் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய மாவட்ட வன அலுவலரும் வன உயிரின காப்பாளருமான முனைவர் அன்பு இ.வ.ப. அவர்கள் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வனச்சரக அலுவலர்
ந.அன்பழகன் தலைமையில் 05.12.2025 அன்று உலக மண் தினம் 2025 நிகழ்ச்சி துவாரகாபதி கடற்கரையில் நடத்தப்பட்டது.

வன உயிரின ஆய்வாளர் பேராசிரியர் செ. சுதாமதி அவர்களின் ஒருங்கிணைப்பில், ஒற்றையால் விளை அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்ற மாணவ–மாணவிகள் பங்கேற்று கடற்கரை தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.
அலையாத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வனவர் ஆர். அசோக், வனக்காப்பாளர்கள் எஸ். தீபா, எம். தீபா, செ. ஆஷிகா சபுராள், பி. முத்துராமலிங்கம், சு. ராஜு, அலையாத்தி குழுத்தலைவர் ரீகன், ஆசிரியைகள் பொன்காசி, ராஜேஸ்வரி,
பரமேஸ்வரி, வேட்டைத் தடுப்பு காவலர்கள் பிரவீன், சிவா, தனிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் சேகரித்த நெகிழிக் கழிவுகள் மற்றும் பாட்டில்கள் கோவளம் பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன், குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
