நீலகிரி : டிசம்பர், 04.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் உதகமண்டலத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை திரு. H. B. ராவ்பகதூர் ஆரிகவுடர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா கூட்டுறவுத்துறையின் சார்பாக கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆரிகவுடர் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர் திரு. முத்துக்குமார், துணைப்பதிவாளர்கள் திரு.அஜித்குமார், திரு. சி. அய்யனார், திரு. ராஜா, திரு. கமல் சேட், திரு.ரவிக்குமார், கூட்டுறவு சார்பதிவாளர் திருமதி. சந்தியா, நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் திரு. ரா. கௌரிசங்கர், கூட்டுறவு சார்பதிவாளர்கள், ஆரி கவுடர் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், விவசாய பெருமக்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.
