Headlines

புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் பங்கேற்பு.

புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் பங்கேற்பு.

தென்காசி டிசம்பர் 1

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பேருந்துகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஏ ஜெயபாலன் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜா வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மருத்துவர் சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

தென்காசி மாவட்டத்தில் 102 நகர பேருந்துகள் சிறப்பாக இயக்கப்பட்டு வரும் நிலையில் 8 புதுப்பிக்கப்பட்ட நகர பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பேருந்துகள் இயக்கப்படுவது இப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது புதிய பேருந்துகளில் பாபநாசம் பணிமனைக்கு 2 பேருந்துகளும் தென்காசி பணிமனைக்கு 3 பேருந்துகளும் சங்கரன்கோவில் பணிமனைக்கு 4 பேருந்துகளும் புளியங்குடி பணிமனைக்கு 3 பேருந்துகளும் செங்கோட்டை பணிமனைக்கு 2 பேருந்துகளும் அடங்கும் புதிய பேருந்துகளில் பெரும்பான்மையானவை மகளிர் விடியல் பயண பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல புதிய திட்டங்களை திறம்பட செய்து வரும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களின் பணி சிறப்பானதாகவும் போக்குவரத்து துறையில் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளாக பி எஸ் 6 பேருந்தாக மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளர் சிவக்குமார் வணிக மேலாளர்கள் சுப்பிரமணியன் மாரியப்பன் கோட்ட மேலாளர்கள் கண்ணன் சங்கரநாராயணன் கிளை மேலாளர்கள் தென்காசி பணிமனை முருகன் சுரேஷ் மத்திய தொமுச பொதுச் செயலாளர் தர்மன் பொருளாளர் முருகன் துணைப் பொதுச் செயலாளர் மகாவிஷ்ணு தென்காசி பணிமனை தொமுச செயலாளரும் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான வல்லம் திவான் ஒலி திருப்பதி தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் ஷேக் தாவுது தென்காசி முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை தென்காசி பணிமனை தொமுச தலைவர் மணிகண்டன் பொருளாளர் ஜோசப் ராஜ் உட்பட ஏராளமான போக்குவரத்து கழக தொழிலாளர்களும் தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *