திருநெல்வேலி,நவ.27:-
பருவமழை காலங்களில், வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை, திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில், எட்டு வட்டங்களில் வறண்ட நிலையில் உள்ள பாசன நிலங்களுக்கு திருப்பி விடும் வகையில் மொத்தம் 1060 கோடி ரூபாய் மதிப்பில், அணமையில் முதலமைச்சரால் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட, வெள்ளநீர் கால்வாய் கால்வாய் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காரியாண்டியில் உள்ள, “கருமேனியாறு” நீர்த்தேக்கத்திலிருந்து, இன்று (நவம்பர். 27) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் முன்னிலையில், நடப்பு பிசானம் பருவ சாகுபடிக்காக, வினாடிக்கு 1600 கன அடி வீதம், தண்ணீர் திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அமிர்த ராஜ், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் ( திட்டஙகள்) திருமலைக்குமார், சிவக்குமார், களக்காடு நகர்மன்ற துணைத்தலைவர் பி.சி. ராஜன், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கிய எட்வின், செயற்பொறியாளர்கள் ஆக்னஸ் ராணி, அருள் பன்னீர் செல்வம், தனலெட்சுமி, உதவி செயற்பொறியாளர் இளங்கோ, இலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் இஸ்ரவேல், உதவி பொறியாளர் யாஸர் அரபாத் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்
