விழுப்புரம், நவம்பர் : 27,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் திருக்குளத்தை பழுது பார்த்து புதுப்பித்தல் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர்.ஷேக் அப்துல் ரஹ்மான், ரவிக்குமார்.MP முன்னிலையில் இன்று குத்துவிளக்கேற்றி பணியினை தொடங்கி வைத்தார்.
உடன் விழுப்புரம் நகரமன்ற தலைவர்.தமிழ்ச்செல்வி , துணை தலைவர் சித்திக்அலி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை செயற்பொறியாளர் யோகராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர். வசந்த் உட்பட பலர் உடன் இருந்தனர் .
