நீலகிரி, நவம்பர் : 27
திமுக இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு துணை முதல்வர்,
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தலைமையேற்று மாவட்ட கழக அலுவலக முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 2026 சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் கழக ஆட்சி அமைந்திட அயராது உழைப்போம் என உறுதியேற்று அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், எக்ஸ்போ செந்தில், தம்பி இஸ்மாயில், சுனிதா நேரு, உதகை நகர செயலாளர்கள் ஜார்ஜ், ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர்கள் காமராஜ், தொரை, பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன்குமார், வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, காந்தல் ரவி, ரஹமத்துல்லா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், உதகை நகர இளைஞர் அணி அமைப்பாளர் விஷ்னுபிரபு, நகர துணை செயலாளர் ரீட்டாமேரி, பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், வெங்கடேஷ், நகரமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், ரகுபதி, செல்வராஜ், மீனா, திவ்யா, மேரி பிளோரீனா, பிரியா வினோதினி உட்பட சார்பு அணிகளின் துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், செயல்விரர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
