உடுமலை : நவம்பர் 27.
உடுமலை ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் சார்பில் உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிலாளர் துறை மனுஸ்மிருதி அடிப்படையிலான வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் சட்டத்தொகுப்பு அமல் படுத்துவதை கைவிட வேண்டும். மின் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
