கன்னியாகுமரி மாவட்டம், நவம்பர் 17:
தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டில், 15வது நிதிக் குழு மானிய நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட தொகையிலான மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த திட்டத்தின் தொடக்கத்தை தேரூர் பேரூராட்சி தலைவர் திருமதி அமுதா ராணி அவர்கள் செய்தார். இந்த நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர்கள், உள்ளூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மழைக்காலத்தில் பெரும்பாலும் நீர் தேங்குதல் பிரச்சனைகளை சந்தித்து வந்த 12வது வார்டில், இந்த வடிகால் பணிகள் நிறைவேறுவதால் மக்கள் வாழ்வாதாரத்திலும், போக்குவரத்திலும் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய பேரூராட்சி தலைவர் அமுதா ராணி, “பேரூராட்சி முழுவதும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கான பணிகள் முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்படும். இந்த வடிகால் திட்டம், மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு திட்டமாகும்,” என்று தெரிவித்தார்.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
