நாகர்கோவில்; நவ. 14
தமிழக வெற்றிக் கழக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் SR. மாதவன் அவர்கள் இன்று (14.11.2025) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் இணைந்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுடன் உரையாற்றிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் சாதனைகள், குழந்தைகளிடம் அவர் கொண்டிருந்த அன்பு மற்றும் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் மேம்பாட்டில் உள்ளது என்ற அவரது பார்வையை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய மாணவர்கள், SR. மாதவன் வழங்கிய இனிப்புகள் மற்றும் வாழ்த்துகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன்: ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர்: பாவலர் ரியாஸ்.
