உடுமலை
நவம்பர் 13.
ஜாக்டோ -ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்ற கோரி உடுமலை மடத்துக்குளம் அரசு அலுவலகங்கள் முன்பு பிரச்சார இயக்கம் நடந்தது.
இதில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயர்நீதிமன்ற ஆணையின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த பிரச்சார இயக்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
உடுமலையில் நடந்த இந்த பிரச்சார இயக்கத்திற்கு ஜாக்டோ ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடசாமி தலைமை வகித்தார்.
மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அம்சராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மடத்துக்குளத்தில் ஒருங்கிணைப்பாளர் பாலு தலைமையில் பிரச்சார இயக்கம் நடந்தது.
