Headlines

மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்று கூறப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து, நீலகிரி மாவட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

மத்திய பா.ஜ.க அரசின் அழுத்தத்தில் செயல்படுகிறது என்று கூறப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள SIR தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை கண்டித்து, நீலகிரி மாவட்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

உதகை:

உதகை ஏ.டி.சி ஜீப் நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே. எம். ராஜூ அவர்கள் தலைமையில் நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு. முபாரக், கூடலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பரமேஸ்குமார், தோழமை கட்சிகள் நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள் கூறியதாவது:

“மத்திய பா.ஜ.க அரசின் திட்டமிட்ட அரசியல் முறைகேட்டின் கீழ், எதிர்க்கட்சிகள் வாக்காளர் ஆதரவை குறைத்து, மக்கள் கருத்தை மாற்ற முயற்சிக்கப்படுகிறது. அதற்காகவே SIR என்ற பெயரில் தீவிர வாக்காளர் கணக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது மக்களாட்சி உரிமையை பறிக்கும் செயல் இந்திய தேர்தல் ஆணையம் சுயாதீன அமைப்பாக இல்லாமல், மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்பதே இதன் மூலம் வெளிப்படுகிறது.”

கூட்டத்தில்,
“SIR திரும்பப் பெற வேண்டும்!”
“மக்களின் வாக்குரிமையில் தலையிட வேண்டாம்!”
என்ற கோசங்கள் முழங்கப்பட்டது.

உள்ளூர், மாவட்ட, நகர மற்றும் கிராம நிலை அமைப்புகள் அனைத்தும் பெரும் திரளாக பங்கேற்றன.

பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:
• மாவட்ட அவைத் தலைவர் போஜன்
• மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி
• மாவட்ட பொருளாளர் நாசர் அலி
• தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், தம்பி இஸ்மாயில்
• மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் வாசிம் ராஜா
• நகரக் கழக செயலாளர்கள் ஜார்ஜ், ராமசாமி, இளஞ்செழியன், சேகரன், ரமேஷ்
• ஒன்றியக் கழக செயலாளர்கள் நெல்லைக்கண்ணன், தொரை
• தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், மோகன்குமார், காளிதாசன்
• பேரூர் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளின் கட்சித் தோழர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தோழமை கட்சிகளின் பொறுப்பாளர்கள்.

ஆர்ப்பாட்டம் முழுவதும் ஒழுங்காக நடைபெற்றது., இறுதியாக, நாசர் அலி நன்றியுரை வழங்கினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *