திருநெல்வேலி,நவ.9:-
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க, திருநெல்வேலி மண்டல கூட்டம், திருநெல்வேலி சந்திப்பு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் உள்ள “விசுவாசம்” அரங்கில், மாநில துணைத் தலைவர் சாமி. நல்ல பெருமாள் தலைமையில், இன்று (நவம்பர்.9) காலையில், நடைபெற்றது.

மாநில சங்கம் எடுத்துள்ள முடிவுகளின் படி, 10 அம்ச கோரிக்கைகளான, * 70 வயதில் 10 சதவிகிதம் தொகையை, ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும்! * அங்கன்வாடி சந்துணவு பணியார்களுக்கு, குறைந்த பட்ச ஓய்வூதியமாக, 7850 ரூபாயினை, வழங்க வேண்டும்! * அரசாணையில் உள்ளது போன்று, கட்டணமில்லா சிகிச்சையை, செயல் படுத்துத வேண்டும்! * பழைய ஓய்வூதியத்தை, உடனடியாக அமுல் படுத்த வேண்டும்!* மருத்துவப்படியை, 1000 ரூபாயாக, உயர்த்தி வழங்கிட வேண்டும்! ஒப்படைப்பு நிதி பிடித்தம்(Commutation RecoveryPeriod) 15 ஆண்டுகள் என்றிருப்பதை, 12 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும்!- உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 3- வது கட்டமாக, அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ஆம் தேதி, சென்னையில் நடைபெறவுள்ள “பெருந்திரள் பேரணி”யில், ஓய்வூதியர்களின் வலிமையை, தமிழக அரசுக்கு உணர்த்திட, திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் சார்பாக, தனி பஸ்கள் மற்றும் வேன்கள் மூலமாக, ஓய்வூதியர் களை சென்னைக்கு அழைத்து செல்வது, வயது மூத்தவர்களை ரயில் மூலம் வரச் செய்வது – ஆகிய தீர்மானங்கள், இன்றைய (நவம்பர்.9) கூட்டத்தில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

நெல்லை மாவட்ட தலைவர் இரா சீத்தாராமன், மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் தேவிகா, தென்காசி மாவட்ட தலைவர் சந்திரன், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் பிச்சபிள்ளை, தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாபு, நெல்லை மாவட்ட செயலாளர் சங்கர நாராயணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிவ சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் தென்காசி மாவட்ட செயலாளர் முருகு பாண்டியன், பொருளாளர் முருகன் உள்பட பலர், கோரிக்கைகளை நிறைவற்ற வேண்டியதின், முக்கியம் குறித்து, எடுத்து கூறினர். கூட்ட நிறைவில், நெல்லை மாவட்ட பொருளாளர் வேங்கடாசலம் அனைவருக்கும், “நன்றி” கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
