கன்னியாகுமரி, அக்.30:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று (29.10.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
இந்த சந்திப்பில் வருவாய் கோட்ட அதிகாரி காளீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியலில் புதுப்பிப்பு, பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் சீராக நடைபெற தேவையான வழிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக விடியல் குமரி மாவட்ட தலைமை நிருபர்: பாவலர் ரியாஸ்.
