அக் 20 கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம்:
அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர். புயல் எச்சரிக்கை குறித்து தெரியாமல் கடலில் இருந்த அவர்களை, மாவட்ட நிர்வாகம் உடனடியாக சேட்டிலைட் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்தது.
மாவட்ட ஆட்சியர் அழகு மீனா IAS தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தின் பின்னர், மீனவர்கள் உடனடியாக பாதுகாப்பாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து கடலில் இருந்த அனைத்து படகுகளும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனவர்கள் உயிர் பாதுகாப்பே முதன்மை எனக் கூறிய ஆட்சியர், கடலுக்குச் செல்லும் முன் வானிலை அறிக்கைகளை கட்டாயமாக கவனிக்குமாறு மீனவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “புயல் காலங்களில் எச்சரிக்கையை புறக்கணிக்க வேண்டாம்; அரசு எப்போதும் உங்களுடன் இருக்கிறது,”
அழகு மீனா IAS, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்
