அக் 17 கன்னியாகுமரி
தோவாளை ஒன்றிய சக்ஷம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முதியவர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு பெட்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாநிலத் தலைவர் சிவகுமார் அவர்களின் வேண்டுகோளின் பேரிலும், மாநில துணைத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவர் சதீஷ் அவர்களின் ஆலோசனைப்படி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த இனிப்பு பெட்டிகளை, அகில இந்திய மக்கள் நலக் கழகம் மாவட்டச் செயலாளர் சாகுல், மாற்றுத்திறனாளிகள் அணி துணைத் தலைவர் கோமதி ராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ரபீக் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில், அகில இந்திய மக்கள் நலக் கழக மாற்றுத்திறனாளிகள் அணி மாவட்டத் தலைவர் மற்றும் தோவாளை ஒன்றிய சக்ஷம் அணி துணைத் தலைவர் வினோத் அவர்கள், “மாற்றுத்திறனாளிகள் நலனில் எப்போதும் பங்கு பெறும் மக்கள் நலக் கழகத்திற்கு மனமார்ந்த நன்றி” தெரிவித்தார்.
மேலும் சக்ஷம் மாவட்டச் செயலாளர் மணி, தோவாளை ஒன்றியத் தலைவர் ராஜேஷ், ஒன்றியச் செயலாளர் சங்கர் ஆகியோர் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சி கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக விடியல் குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
