Headlines

அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி…

அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி...

நீலகிரி மாவட்டம் எம் பாலாடா அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்கள் 15 பேருக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி 10 நாட்கள் வழங்கப்படவுள்ளது.

6-10-2025 முதல் 15-10-2025 வரை அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா ஆகிய இடங்களில் உள்தோட்டம் அமைத்தல் புல்தரை அமைத்தல் பூங்காவின் அருகில், வீட்டு காய்கறி தோட்டம் மரங்களை பராமரித்தல் கண்ணாடி மாளிகை தோட்டம், இயற்கை விழிப்புணர்வு இயற்கைப் பற்றிய அறிவு வளர்த்தல் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. வேளாண் தொழிற் கல்வி ஆசிரியர் புஸ்பராஜன் உதவி ஆசிரியர் போஜன் ஆகியோர் பங்கேற்று வழிநடத்துகின்றனர்.

களப்பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவியரை பள்ளியின் பொறுப்பு தலமை ஆசிரியர் செந்தில்குமார் என் சி சி முதன்மை அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்து அறிவுரை கூறி அனைவரையும் வழிஅனுப்பி வைத்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *