செப் 07, உடுமலை –
உடுமலை ரயில் நிலையத்தில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை பயணிகளுக்கு செய்யப்படும் அடிப்படை வசதிகள் மற்றும் ரயில் பாதையை ஒட்டியுவாறு தெற்கு புறமாக உள்ள ரயில்வேக்கு சொந்தமான காலிஇடத்தில் மரங்கள் நடுவது குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது பொள்ளாச்சி உடுமலை பழனி திண்டுக்கல் வழியாக இயங்கிய கோவை தாம்பரம் கோவை திண்டுக்கல் ரயில்களை மீண்டும் இயக்கவும் கோவை ராமேஸ்வரம் ரயில் கோவை கொல்லம்( வழி மதுரை செங்கோட்டை) ரயில்களை பொள்ளாச்சி பழனி வழியாக மீண்டும் இயக்க வேண்டும்.
சென்னை பாலக்காடு ரயில் மற்றும் திருச்செந்தூர் பாலக்காடு ரயில் மடத்துக்குளம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.
கோவை மங்களூர் இன்டர்சிட்டி ரயில் மற்றும் எர்ணாகுளம் காரைக்கால் ரயில் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனு அவரிடம் வழங்கப்பட்டது.
இந்த மனுவை ரயில்வே பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.
