திருநெல்வேலி, அக்.4:-
ஏழை-எளிய மக்கள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே, இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை பெற்று, அதன் தொடர்ச்சியாக ஆரம்ப நிலையிலேயே நோய்களை கண்டறிந்து, உடனடியாக இலவசமாக உரிய சிகிச்சையை பெறுவதற்கு வசதியாக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட, மகத்தான மருத்துவ திடடம் தான், “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்டம் ஆகும்.
இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி முதல், தமிழக அரசால் மாநிலம் முழுவதும், செயல்படுத்தப் பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், சனிக்கிழமை தோறும் “நலம் காக்கும் ஸ்டாலின்!” முகாம், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.
இதன்படி, இன்று (அக்டோபர். 4) “நலம் காக்கும் ஸ்டாலின்!”-திட்ட சிறப்பு மருத்துவ முகாம், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் “முன்னீர்பள்ளம்” கிராமத்தில் நடைபெற்றது.
இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்ற இந்த முகாமினை,மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார் தலைமையில், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் “ரூபி”ஆர். மனோகரன் “குத்துவிளக்கு” ஏற்றி, துவக்கி வைத்தார்.
பயனாளிகளுககு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இன்றைய முகாமில், 17வகையான நோய்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இத்தகைய மருத்துவ பரிசோதனைகளை, அவரவர் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டனர். சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் 22பேர் உட்பட, மொத்தம் 35 மருததுவர்கள், இம்முகாமில் பங்கெடுத்துக் கொண்டனர்.
இவர்களைத் தவிர, சுகாதாரப் பணியாளர்கள் 297 பேர், இம்முகாமிற்காக பணியமர்த்தப் பட்டிருந்தனர். பொதுமக்கள் மட்டுமல்லாது, கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும், இம்முகாமில் கலந்து கொண்டு, பயனபெற்றனர்.
முகாமில், மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாகடர் லதா, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் விஜய சந்திரன், முன்னீர் பள்ளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜஸ்டீன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் : மேலப்பாளையம் ஹஸன்.
