பெரிய விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் அல்லது
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?…. என்று பொதுமக்கள் கேள்வி..?
நீலகிரி மாவட்டம் கேத்தி ராஜ்குமார் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பலர் கடைகளை அமைத்து சுற்றுலா பயணிகளை தொந்தரவு செய்வதும் அல்லாமல் சுற்றுலா பயணிகள் அவர்கள் வரும் வாகனத்தை நிறுத்தி இயற்கை ரசிக்கக் கூடிய இடத்தை ஆக்கிரமித்து உள்ளதால் இங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது இதனால் அங்கு விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது.
நேற்றும் அங்கு ஒரு லாரி கவிழ்ந்து விட்டது… இந்தக் கடைகளினால்.. தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு பயனுள்ளதாக உள்ளதா அல்லது கேத்தி காவல்துறையினருக்கு பயனுள்ளதாக உள்ளதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்…
