செப் 28. உடுமலை –
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பெரிய கடை வீதியில் நவநீதகிருஷ்ணன் கோவிலில் நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான உற்சவர் ஸ்ரீ பூமி நீளா நாயகி ஸ்மேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.
அப்பொழுது சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
