நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி-ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட தின்னியூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வண்ண மேற்கூரை அமைக்கப்பட்ட மயான அரங்கினை, இன்று (25.09.2025) மாண்புமிகு தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
உடன் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) செல்வி. அபிலாஷா கெளர் இ.ஆ.ப.,பொறியாளர் செந்தில்,ஊராட்சி உதவி பொறியாளர் ஜெயந்தி,மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் கே எம் ராஜு,அவைத்தலைவர் போஜன்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் வீரபத்திரன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமன்,மாவட்ட பிரதிநிதி ரவி,கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் சில்லபாபு மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
