செப் 22 கன்னியாகுமரி –
நாகர்கோவில் – BSNL கஸ்டமர் கேர் சென்டரில் சேவைக்காக வரும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வேலையை கவனிக்காமல் ஆமை வேகத்தில் குடும்பக் கதைகள் பேசிக்கொண்டு நேரத்தை கழிக்கும் ஊழியர்கள் மீது மக்கள் விரக்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மற்ற அனைத்து நிறுவனங்களும் 5G சேவையை வழங்கும் காலத்தில், BSNL வாடிக்கையாளர்கள் இன்னமும் 3G வேகம் கூட இல்லாமல் சிரமப்படுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மக்கள் குற்றச்சாட்டு: “சேவைகள் பின் தங்குவதற்கு காரணம், அலட்சியமாக பணிபுரியும் இப்படிப் பட்ட ஊழியர்கள்தான்.”
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, வாடிக்கையாளர்களின் குறைகளை தீவிரமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுக்குமா? என்பது தற்போது எழும் கேள்வியாக உள்ளது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
