Headlines

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து முப்பெரும் விழா : ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து முப்பெரும் விழா : ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் இன்னர் வீல் கிளப் இணைந்து ரோட்டரி நூற்றாண்டு மண்டபத்தில் மனைவி நல வேட்பு விழா, அறக்கட்டளை மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஞானாசிரியர் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

முன்னூற்றுக்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஞானாசிரியர்கள் மற்றும் அறங்காவலர்களுக்கு விருதுகள் வழங்கியும், காந்த பரிமாற்ற தவத்துடன் கணவன் மலர் கொடுக்க, மனைவி கனி கொடுக்க கண்கள் கலக்கும் அன்பு பரிமாற்றம் நடைபெற்றது.

இந்நிகழ்வு மனைவியின் மதிப்பையும் தியாகத்தையும் போற்றும் நெகிழ்வான நிகழ்வாக அமைந்தது.

நிர்வாக அறங்காவலர் சீனிவாசன் தலைமையில் தங்கவேலு வாழ்த்துரை வழங்க அறக்கட்டளை செயலாளர் முருகன் நிகழ்வை நடத்தினார்.

தொழில் அதிபர் ஜனார்த்தனன், ரோட்டரி, இன்னர் வீல் மற்றும் அனைத்து பொதுநல சங்கங்கள் சார்பில் தம்பதியர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பொருளாளர் கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூறி உலக நல வாழ்த்துகூற நிகழ்வு விருந்துடன் நிறைவுபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் – GB. குருசாமி

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *