செப் 21 கன்னியாகுமரி –
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், மாவட்டத்தில் உள்ள பல கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது.
கோவளம், துவாராக, பதி, சொத்த விளை, கணபதிபுரம் லெமூரியா பீச், மணவாளக்குறிச்சி பீச், மண்டைக்காடு, குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த முறையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், முன்னாள் ராணுவத்தினர் உட்பட 400க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்று கடற்கரை பகுதிகளைச் சுத்தம் செய்தனர்.
மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் ஸ்ரீமன் கோ. கண்ணன் ஜி நேரில் கலந்து கொண்டு ஊக்கமளித்தார். மாவட்ட அமைப்பாளர் N. அஜி, அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்து சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
இந்நிகழ்ச்சி, கடற்கரைகளின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
மணக்குடி கோஷ்டல் சிறப்பு நிருபர் – மேரி.
