செப் 19 கன்னியாகுமரி –
குமரி மாவட்டம் களியல் அருகே கிலாத்தூர் பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மிகப் பெரிய மலைப்பாம்பு ஒன்று தோன்றியது.
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் திடீரென மரத்தடியில் அசைவு ஏற்பட்டதை கவனித்தனர். அருகே சென்று பார்த்தபோது, சுமார் 12 அடியளவு நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சுருண்டபடி இருந்தது.
அச்சத்தால் தொழிலாளர்கள் கூச்சலிட்டதும், அப்பகுதி மக்கள் கூடிவந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாதுகாப்புடன் பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
