மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் காரத்தொழுவு திமுக கிளைக் கழக செயற்குழு மற்றும் வாக்குச்சாவடி குழு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு கிளைக் கழக அவைத்தலைவர் கே.கே.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கிளை கழக செயலாளர் எம்.ஜான்சா அலி வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் க.இளங்கோவன் , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் இரா.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடைபெற்ற கூட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன…
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் கழக கொடி ஏற்றியும் இனிப்புகள் வழங்குவதும்.
தந்தை பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதும்.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை, BLA , BDA மற்றும் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் இதுவரை சேர்த்துள்ள 40% சதவிகிதத்தை, மாவட்ட கழக வேண்டுகோளின் படி 50% சதவீத உறுப்பினர்களை விரைவாக சேர்த்து முடிப்பது எனவும்.
காரத்தொழுவு திமுக சார்பில் காரத்தொழுவுவில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான கூடுதல் பள்ளிக்கட்டிடம் வேண்டுமென கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் நான்கு வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் , மாண்புமிகு துணை முதலமைச்சர் , மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும்.
காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகைதந்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் , மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி , மடத்துக்குளம் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.ஏ.சாகுல் ஹமீது மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர், அரசு அலுவலர்கள் , கழக முன்னோடிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் இயற்றப்பட்டன. கூட்டத்தில் காரத்தொழுவு திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கிளைக்கழக பொருளாளர் கிருஷ்ணசாமி நன்றி தெரிவித்தார்.
