Headlines

நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

நாகர்கோவிலில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் !

செப் 12 கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகவிலை படி கூட இல்லாமல் தினமும் 12 மணி நேரத்திற்கு மேல் உழைத்து வரும் பணியாளர்களுக்கு 30% ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், 16% ஊதிய உயர்வில் 10% மட்டுமே வழங்கி விட்டு, மீதமுள்ள 6% ஊதியத்தை தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனம் கொள்ளையடித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *