Headlines

ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் :

ஆம்பூர் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் :

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் – அழிஞ்சிகுப்பம் பகுதியை இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பாலம் தீர்ப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற சி.என்.அண்ணாதுரை, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.
எம்.கதிர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ப.செந்தில் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள், மற்றும் சிறுதுறை முகங்கள் துறை
அமைச்சர் ஏ.வ. வேலு கலந்துகொண்டு உயர் மட்ட பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 18 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2.12 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்பு வழங்குதல் மற்றும் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், பிற சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது :-

இந்த ஆட்சியின் பெயர் திராவிட மாடல் ஆட்சி.

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது இந்த ஆட்சியின் இலக்கு.

சிலர் ஆர்வ கோளாறு காரணமாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பொது வழியில் காலில் விழுந்து வாழ்த்து பெறுவது திராவிட மாடல் ஆட்சியில் ஏற்ற கொள்ளத ஒன்று.

இது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கியவயர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த பாலத்தின் மொத்த நீலம் 275 மீட்டர், அகலம் 12 மீட்டர். இந்த பாலம் கட்டுவதான் மூலம் ஆம்பூர், மேல்பட்டி, நரியம்பட்டு, ராஜக்கல், பச்சகுப்பம், அழிஞ்சிகுப்பம், ரெட்டி மாங்குப்பம், கொத்த குப்பம், சங்கராபுரம், எம்.வி குப்பம், வசந்தபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் இந்த பாலத்தின் மூலமாக பயன்பெறுவார்கள்.

ஆம்பூர் பொறுத்த வரையில் இந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் 88 கோடி ரூபாய் செலவில் 60 கிலோமீட்டர் நீளத்திற்கு 31 சாலை பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

8 கோடி மதிப்பெட்டில் 7 கிலோமீட்டர் நீளத்திற்கு ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

29 கோடி மதிப்பீட்டில் ஐந்து தரை பாலங்களை உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியில் 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டு அதனை கட்டுவதற்கு இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டு இந்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 1281 தரைபாளங்களில் திராவிட மாடல் ஆட்சியில் 1191 தரை பாலங்களை உயர்மட்ட பாலங்களாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதும்முள்ள 61 தரை பாலங்கள் உயர் மட்ட பாலங்களாக கட்ட தமிழக முதலமைச்சர் 291 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் அதுவும் கட்டி முடிக்கப்படும்.

ஏற்கனேவே கடந்த ஆட்சியில்
71 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட டெண்டர் விட்டு சென்றுள்ளனர்.

இருபுறம் அணுகு சாலை அமைக்க நிலத்தை கையேகபடுத்த வேண்டும்.

நிலங்கள் கையகப்படுத்தாததால் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

திராவிட மாடல் நான்கரை ஆண்டு ஆட்சி காலத்தில் 71 ரயில்வே பாலங்களில் 27 பாலங்கள் பணிகள் முடித்து மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

11 ஆர்.ஓ.பி பாலங்களுக்காக நில கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீதுமுள்ள 31 பாலங்களுக்கான பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது என்று பேசினார்.

விழாவில் ஆம்பூர் நகர மன்ற தலைவர் மக்களின் பாசத்திற்குரிய அண்ணன் திரு.பத்தேகான் ஏஜாஸ் அஹமத் மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார், ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி, பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்தனன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சசிகலா சாந்தகுமார், வடபுதுபட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குப்புசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் எம்.முத்து உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பி.பரந்தாமன் நன்றி கூறினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *