கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தெருவிளக்குகள் அமைத்து தராமல் கடந்த நான்கரை ஆண்டுகளாக அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து, 25-க்கும் மேற்பட்ட பேரூராட்சி மன்றத் தலைவர்கள் இன்று (22.08.2025) நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது நிதி அல்லது சிறப்பு நிதியிலோ தெருவிளக்குகளுக்கான நிதி ஒதுக்கப்படாமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், உடனடி நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
