ஆக் 20, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மனைவி பேச்சியம்மாளின் 4 மாத பெண் குழந்தை நேற்று தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தபோது, தாய்ப்பால் புரையேறி மூக்குவழியாக வெளியேறியது. இதனால் குழந்தை மயக்கம் அடைந்தது.
உடனடியாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
