ஊட்டி சோலூர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி தோடரின மக்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் சோலூர் பேரூராட்சிக்குட்ப்பட்ட பகுதியான கோணக்கட்டி பாலம் அருகில் அரசு டாஸ்மாக் மதுபான கடை உள்ளது.
சோலூருக்கு செலக்கல், தூபக்கண்டி, கோக்கல், கொட்டலைன், கன்னேரி, மூக்கு ஆகிய பகுதிலிருந்து அந்த வழியாக சோலூர் பள்ளி அமைந்துள்ளதால், பள்ளி மாணவ மாணவிகள் டாஸ்மாக் கடை வழியாக செல்ல வேண்டியுள்ளது.
அந்த வழியாவே ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. குடி பிரியர்கள் சாலை ஓரத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டு பொது மக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையூறு செய்து வருகின்றனர்.
மேலும், அங்கு இயங்கி வரும் மதுபான கடை கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
எனவே, அந்த கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தோடர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் பொது செயலாளர் ஏ.சத்தியராஜ் மாவட்ட ஆட்சியிடம் மனு வழங்கினார். மனுவில், பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளஅந்த மது பான கடையை வேறு இடததுக்கு இடமாற்றம் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
