மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்
செங்கோட்டை: ஜன – 14
தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் பொங்கல் விழா சமத்துவ பொங்கல் ஆக கொண்டாடப்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் தென்காசி மாவட்டம் தேன் பொத்தை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி கனி தலைமையில் சமத்துவ பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி கலந்து கொண்டு பொங்கல் நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் திமுக கிளைச் செயலாளர் திருமலாபுரம் முருகன் மணலூர் திவான் ஒலி மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் தூய்மை பணியாளர்களுக்கு தேன் பொத்தை ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி புத்தாடைகளை வழங்கி சிறப்பித்தார்.
