தென்காசி : டிச- 25
தென்காசி பங்கின் கிளை பங்கான செங்கோல் நகரில் அருள் பாலித்து கொண்டிருக்கும் செங்கோல் அன்னை ஆலயத்தில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திருப்பலி வருகை பவனியில் சிறு குழந்தைகள் குழந்தை யேசு சொரூபத்தை கரங்களில் ஏந்தி வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு திருப்பலியினை தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் உதவிப் பங்குத் தந்தை அருட் பணி. ஜியோ சந்தனம் அடிகளார் தலைமையேற்று நிறைவேற்றினார். “இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்” என்கின்ற மைய சிந்தனையில் மறையுரை ஆற்றினார்.
இவ்விழாவில் அருட்சகோதரிகள் சாந்தி, ரமணி, செங்கோல் நகர் நாட்டாண்மை மாணிக்கம், ஆசிரியர்கள் பிலிப் ராஜ், ஜான்சன், பயஸ், சொரூபா , செல்வி, பிரதிபா , மெர்லின், பொறியாளர் பிரபு, திருச்சி தூய வளனார் கல்லூரி உதவிப் பேராசியர் பிரதாப், பத்திரிகையாளர் ஜெரால்டு மற்றும் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழக்கப்பட்டது.
தொடர்ந்து ஒருவருக்கு கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்துத்துகள் தெரிவித்து தங்களின் அன்பினை பகிர்ந்து கொண்டனர். தென்காசி மற்றும் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளான குத்துக்கல் வலசை, சுந்தரபாண்டியபுரம், அகரக்கட்டு, வல்லம் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேவால யங்களிலும் நள்ளிரவு பிராத்தனைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
