Headlines

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்! துணை மேயர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்கள் பெற்றார்!

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்! துணை மேயர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்கள் பெற்றார்!

திருநெல்வேலி,டிச.16:-
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வைத்து, இன்று (டிசம்பர்.16) காலையில் “மக்கள் குறைதீர்க்கும் மனுநாள் முகாம்” நடைபெற்றது. துணைமேயர் கே.ஆர்.ராஜூ, இந்த முகாமில் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனை தொடர்ந்து, பெறப்பட்ட, மனுக்கள் மீது, உரிய நடடிவக்கைகளை எடுத்திடுமாறு, சம்பந்தப்பட்ட அலுவர்களிடம், துணை மேயர் கேட்டுக்கொண்டார். உதவி ஆணையாளர் மகாலெட்சுமி, அப்போது உடனிருந்தார்.

மாநகர மக்கள் கொடுத்த மனுக்களில் குறிப்பிட்டுள்ள, முக்கிய அம்சங்கள் வருமாறு:-
14-வது வார்டு கவுன்சிலர் ஆர்.கீதா அளித்த மனுவில், ஆனந்தபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு, மேல ஊருடையார்புரம் என பெயர் மாற்றம் செய்ய கேட்டும், ரஹ்மத்நகர் கிழக்கு பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் அளித்த மனுவில், 5வது வார்டு ரஹ்மத்நகர் கிழக்கு பகுதி 80 அடி ரோடு மற்றும் இணைப்பு தெருக்களில் மழைநீர் வடிகால் மற்றும் சாலை அமைக்க கேட்டும், மேலப்பாளையம் மண்டலம் இந்திரா நகர், சோனியா நகர், மேசியா நகர், காருண்யா நகர், சோனியா காலனி, தென்றல் நகர் ஆகிய பகுதி மக்கள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் மழைநீரை தவிர வீட்டு கழிவு நீர் தெருக்களில் வருவதில்லை. அனைத்து தெருக்களும், சுத்தமாகவும்- சுகாதாரமாகவும் இருப்பதால், பாதாளச்சாக்கடை வசதி வேண்டாம்! எனவும், 55-வது வார்டு தியாகராஜ நகர் 15-வது தெற்கு தெரு சிருங்கேரி சாரதா பள்ளி மற்றும் புஷ்பலதா பள்ளி இணைப்பு சாலை குடியிருப்போர் மற்றும் பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியை சார்ந்த சிராஜ் ஆகியோர் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் கழிவு நீர் வெளியேறுவதை தடுத்திட, நடடிவக்கை மேற்கொள்ள கேட்டும். தச்சநல்லூர் ஆனந்தாபுரத்தை சார்ந்த முருகன் அளித்த மனுவில், நெல்லை சந்திப்பு தாமிரபரணி ஆற்றங்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கேட்டும், டவுண் செங்குந்தர் பெரிய தெருவை சார்ந்த பிரேமா அளித்த மனுவில், தனது ஒரே வீட்டிற்கு 2 தீர்வை இருப்பதால், பழைய தீர்வையினை ரத்து செய்ய கேட்டும், மேலப்பாளையம் உமர் புலவர் தெரு “அசோசியேசன் ஆப் அன்சார்” அளித்த மனுவில், மேலப்பாளையம் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள, அம்மா உணவகம் அருகில் இருக்கும் காலி இடத்தில், துணை சுகாதார நிலையம் அமைக்க கேட்டும், மேலப்பாளையம் அசன் தரகன் தெருவை சார்ந்த ஹமீது சுல்தான் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் சுமார் 20 நாட்களாக எரியாமல் உள்ள தெரு விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டும், திருநெல்வேலி டவுண் ஸ்ரீராம்நகர் பொது மக்கள் அளித்த மனுவில், 4-வது தெரு மற்றும் 5-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில், மின்விளக்கு அமைத்து தரகேட்டும், மேலப்பாளையம்
வடக்கு தைக்கா தெருவை சார்ந்த ஜாபர் அளித்த மனுவில், பிறப்பு இறப்பு கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்களுக்கு, முன்பு நடைமுறையில் இருந்தது போல், ஆணை நகல்கள் வழங்க கேட்டும்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த முத்து மணிகண்டன் அளித்த மனுவில், 31-வது வார்டில் சாலை அமைத்திடவும், அக்ரஹாரம் தெருவில் வாய்க்கால் பகுதியில் உள்ள, படித்துறையினை சரி செய்து தரக்கேட்டும், 43-வது வார்டில் பாதாளச்சாக்கடை உடைப்பினை சரி செய்துதரக் கேட்டும், 52-வது வார்டு ராஜா நகர் 3-வது தெருவில் பாதாளச்சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுத்திட கேட்டும்,இந்த மக்கள் குறை தீர்க்கும் மனுநாள் முகாமில், மனு அளித்தனர்.

முகாமில், சுகாதார அலுவலர்கள் பாலசந்தர், சாகுல்அமீது,முருகன் சுகாதார ஆய்வாளர் முருகன் உட்பட, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *