Headlines

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கஞ்சனூர் காவல் நிலையம்: கூலி தொழிலாளி தவறவிட்ட ரூபாய் 50,000 பணம் 1/2 மணிநேரத்திற்க்குள் மீட்டு தொழிலாளியிடம் ஒப்படைத்த போலீசார்..

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கஞ்சனூர் காவல் நிலையம்: கூலி தொழிலாளி தவறவிட்ட ரூபாய் 50,000 பணம் 1/2 மணிநேரத்திற்க்குள் மீட்டு தொழிலாளியிடம் ஒப்படைத்த போலீசார்..

கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எசாலம் மெயின் ரோட்டில் வசிக்கும் துரைசிங்கம் என்பவரின் மகன் பாஸ்கர் 63 என்பவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக நண்பரிடம் இருந்து ரூபாய் 50,000 கடனாக பெற்று வந்து தனது சைக்கிளில் வரும் பொழுது கீழே எங்கேயோ தவறி விழுந்து விட்டதாக பதட்டத்துடன் காவல் நிலையத்தை நாடி தனது பணம் காணவில்லை என தெரிவித்ததன் பேரில் உடனடியாக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் தலைமை காவலர் திரு.ஏழுமலை ஆகியோர் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பணத்தை தேடி சென்ற நிலையில் பணம் பையுடன் தெருவின் ஓரமாக கிடந்ததை கண்டறிந்து அதனை எடுத்து வந்து கூலித் தொழிலாளியிடம் ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் கூலி தொழிலாளி போலீசாருக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *