Headlines

உடுமலை மூணாறு சாலையில் கம்பீரமாக நடந்து வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல் – சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை…!

உடுமலை மூணாறு சாலையில் கம்பீரமாக நடந்து வந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல் - சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை...!

உடுமலை
நவம்பர் 22.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது சுற்றுலாத்தலமான மூணாறு இந்த பகுதிக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்த சுற்றுலா பயணிகள் உடுமலை மூணாறு செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இந்த வனப் பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தண்ணீர் அருந்துவதற்காக சாலையை கடந்து செல்வது வழக்கம் குறிப்பாக யானைகளில் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்நிலையில் உடுமலை அருகே உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வந்த ஒற்றைக் காட்டு யானை சாலையில் கம்பீரமாக நடந்து சென்றுள்ளது அப்போது அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் யானையை கண்டு உற்சாகமடைந்ததோடு தனது செல்போனில் படம் பிடித்த நிலையில் தற்போது இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை கண்ட வனத்துறையினர் வனசாலையில் செல்லும் பொழுது வனவிலங்குகளை கண்டால் வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் வனவிலங்குகளுக்கு அருகே சென்று புகைப்படங்கள் எடுக்கவோ வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வருகின்றனர்.

மேலும் தற்போது உடுமலை மூணாறு சாலையில் யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதால் அமராவதி வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *