மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் நேற்று (17.11.25-திங்கட்கிழமை) கோவை, வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் மருத்துவர் E.டென்னிஸ் கோவில்பிள்ளை அவர்கள் தலைமை வகித்தார்.
இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மேற்கு மண்டலச் செயலாளர் பேராசிரியர் S.காமராஜ் முன்னிலை வகித்தார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், வடவள்ளி பகுதி தி.மு.க. செயலாளர் வ.ம.சண்முசுந்தரம், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, சிபிஎம் கட்சியின் ஒன்றிய செயலாளர் தோழர் மணி, தமிழ்நாடு திராவிட சுயமரியாதை கழகத்தின் தலைவர் மா.நேருதாசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மருத்துவர் மாணிக்கம், புரட்சிகர இளைஞர் முன்னனியைச் சார்ந்த வழக்குரைஞர் மலரவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சார்ந்த தோழர் சந்திரசேகர் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்கள்.
திமுக வட்டக் கழக செயலாளர் ச.விஸ்வநாதன், குத்தூசி குருசாமி படிப்பக பொறுப்பாளர் சா.கதிரவன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகர தலைவர் கா.சோமசுந்தரம், ரஞ்சித், தர்மன் இந்திய ஒற்றுமை இயக்க தோழர் பிரகாஷ் பிரபா மற்றும் பலர் பங்கேற்றனர்.
*இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் “உச்ச நீதி மன்றமே, திருட்டு ஓட்டுக்கு துணை போகும் தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமாரை கைது செய்”, “தேர்தல் ஆணையமே! உன்னிடமே உள்ள 2002 வாக்காளர் பட்டியலை மக்களிடம் கேட்கும் மர்மம் என்ன?”, “திருட்டு ஓட்டில் பதவியில் இருக்கும் மோடியே பதவி விலகு!”, ஆகிய வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் பிடித்தபடி முழக்கங்களை எழுப்பினார்கள்.
கோவை மாவட்ட -செய்தியாளர்: சம்பத் குமார்
