மதுரை:-
மதுரை நெல்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட நிலையில் புதிதாக காய்கறி மார்க்கெட் கட்டப்பட்டு வந்தது இந்த காய்கறி மார்க்கெட்டை அமைச்சர் நேரு, மூர்த்தியும் திறந்து வைத்தார்கள்.

காய்கறி மார்க்கெட்டில் அதிக தொகை கொடுத்தும் மதுரை மாநகராட்சிக்கு டெபாசிட் கட்ட முடியாத வாழ்வாதாரம் இழந்து தவித்த வியாபாரிகள் வெளியே கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஒதுக்குப்புறத்தில் கடை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது மதுரை மாநகராட்சியும் ,கம்யூனிஸ்ட் கட்சி சங்கம் சார்பில் செயல்படும் தலைவர் கனிராஜா மற்றும் சர்க்கரை ஆகியோரால் வியாபாரிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டு வருகிறது.
மேலும் மதுரை மாநகராட்சி வியாபாரிகள் இடையே சண்டே இழுத்து விட்டு வேடிக்கை பார்த்து வருகிறது இதற்கு கூறிய நடவடிக்கையை மதுரை மாநகராட்சி ஆணையாளரும் விளம்பர பிரியர் சித்ரா விஜயன் மேற்கொள்வாரா அல்லது வியாபாரிகள் சண்டை போடுவதை கைகட்டி வேடிக்கை பார்ப்பாரா என்று மார்கெட்டி வியாபாரிகள் கேள்விகளை எழுப்பி உள்ளார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.
