72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது நீலகிரி மாவட்ட கூட்டுறவுத்துறையால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இக்கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளான இன்று 15.11.2025 சனிக்கிழமை நீலகிரி மாவட்ட கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமானது கூட்டுறவுத்துறை மற்றும் ஐ பவுண்டேஷன் ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மரு. தே. சித்ரா அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
இந்த முகாமில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள், நியாய விலைக்கடை விற்பனையாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகம் நடத்தப்பட்டது.
கண் பரிசோதனையுடன் சிறு பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. கண் மற்றும் வழங்கப்பட்ட கண் கண்ணாடி பராமரிப்பு குறித்து ஆலோசனையும் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பணியாளர்கள், அலுவலர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் திரு. அஜித் குமார், திரு. சி. அய்யனார், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் திரு. ரா. கௌரிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
